தமிழக செய்திகள்

திண்டுக்கல் அருகே லாரி-கார் மோதல்; பெண் போலீஸ் பலி

திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் போலீஸ் பரிதாபமாக் உயிரிழந்தார்.

திண்டுக்கல்:

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி சுகந்தி (வயது 27). இவர் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் தங்கள் காரில் திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது காரை சதீஷ்குமார் ஓட்டியுள்ளார்.

திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் ஏ.பி.நகர் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று, அவர்களது கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த சுகந்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

சதீஷ்குமார் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.