தமிழக செய்திகள்

விருதுநகரில் ரூ.5 கோடி மோசடி: நிதி நிறுவன இயக்குனர் கைது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் இயங்கி வந்த ஒரு தனியார் நிதி நிறுவனம், அதிக வட்டி மற்றும் தங்க நாணயம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி செய்தது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன இயக்குனரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நிதி நிறுவனம் ரூ.5 கோடி மோசடி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனம், அதிக வட்டி மற்றும் தங்க நாணயம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி செய்தது.

11 பேர் மீது வழக்குப்பதிவு

கடந்த 2022-ம் ஆண்டு மேற்சொன்ன தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த ராஜசேகரன் தொடர்ந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி, 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நிதி நிறுவன இயக்குநர் கைது

இந்த நிதி மோசடி வழக்கில், தலைமறைவாக இருந்த நிதி நிறுவன இயக்குனர் காளீஸ்வரனை (வயது 35) மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.