தமிழக செய்திகள்

விருதுநகர் பட்டாசு ஆலையில் தீ விபத்து: நயினார் நாகேந்திரன் இரங்கல்

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுநகர்,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கட்டனார்பட்டியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில், இதுவரை 17-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

இக்கொடூர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

மேலும், கோடைகாலம் துவங்கிவிட்ட நிலையில் வெடிமருந்துகளைப் புழங்கும் பட்டாசு ஆலைகள் அதீத கவனத்துடன் செயல்படுவதோடு, தொழிலாளர்களின் பாதுகாப்பிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT