தமிழக செய்திகள்

சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து

தீ விபத்தில் வங்கியில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே இந்தியன் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் இன்று காலை ஜன்னல் வழியாக கரும்புகை வந்துகொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் அளித்தனர்.

தகவலின்பேரின் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிலையம் அருகே இந்த விபத்து நடந்திருப்பதால், சிவராத்திரி இரவு முழுவதும் கோவிலுக்குச் சென்று வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால் தீயை அணைக்கு பணியில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் வங்கியில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.