சென்னை
"முதல்-அமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!" என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
'ஆஃப் தி ரெக்கார்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரிக்கமுடியாது, இரண்டும் சேர்ந்து தான் பயணம் செய்யும். அதில் இன்னொரு ஜனநாயக புரட்சியை சினிமா பயணம் உருவாக்கி கொடுத்திருக்கிறது.
"தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்ற நம்பிக்கையை முதல்-அமைச்சர் விஜய் கொடுத்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன்" அதே வேளையில், அரசியல் பழிவாங்கல்களுக்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ யாரோ ஒருவர் மீது பொய்யான எஃப்.ஐ.ஆர் (FIR) போடும் நிலைக்கு அரசு சென்றுவிடக்கூடாது என்றும் அவர் பேசியுள்ளார்.