திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன். துபாய். அபுதாபி உள்பட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து தமாம், சவுதி அரேபியா வழியாக குவைத்திற்கு புதிய விமான நிறுவனமான ஜெசிரா தனது சேவையை வருகிற 7-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த விமான சேவையானது செவ்வாய்க்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு குவைத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு அதிகாலை 4.40 மணிக்கு வந்தடையும்.
பின்னர் மீண் டும் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5.25 மணிக்கு புறப்பட்டு குவைத் விமான நிலையத்திற்கு 8.45 மணிக்கு சென்றடையும். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.