தமிழக செய்திகள்

டிசம்பர் 15-ந்தேதி முதல் சென்னை-கொழும்பு இடையே விமான சேவை தொடக்கம்

சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு, 'பிட்ஸ் ஏர்' நிறுவனம் விமான சேவையை, டிசம்பர் 15-ந்தேதி தொடங்க உள்ளது.

சென்னை,

செவ்வாய், புதன், வியாழன், சனி ஆகிய நான்கு நாட்கள் கொழும்புவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் விமானம், காலை 9.15 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னையில் இருந்து காலை, 10.15 மணிக்குப் புறப்படும் விமா னம், காலை 11.30 மணிக்கு கொழும்பு சென்றடையும்.

திங்கள், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், கொழும்புவில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 1.15 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னையில் இருந்து மதியம் 2.15 மணிக்குப் புறப்படும் விமானம், 3.30 மணிக்குக் கொழும்பு சென்றடையும். இதற்கான முன்பதிவும் துவங்கியுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT