தமிழக செய்திகள்

திருச்சி-யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமான சேவை: பயணிகள் மகிழ்ச்சி!

திருச்சி-யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.

சென்னை,

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி-யாழ்ப்பாணம் இடையே விமான சேவை ரத்து

திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு ஏற்கனவே விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த விமான சேவையானது ரத்து செய்யப்பட்டது.

திருச்சி-யாழ்ப்பாணம் இடையே விமான சேவை மீண்டும் தொடக்கம்

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை இண்டிகோ நிறுவனம் சார்பில் நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுமார் 45 முதல் 50 நிமிடங்களிலேயே யாழ்ப்பாணத்தை சென்றடையலாம்.

பயணிகள் மகிழ்ச்சி

வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் இந்த சேவை வழங்கப்படுகிறது. நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 45 பயணிகளும், திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற விமானத்தில் 44 பயணிகளும் பயணம் செய்தனர். யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT