சென்னை,
விமான எரிபொருள் விலை அதிகரித்து உள்ளதால், விமான டிக்கெட் கட்டணம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் உயர்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்து உள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்தியாவிலும் வர்த்தக கியாஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை சமீபத்தில் உயர்ந்தது. குறிப்பாக விமான எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.16 உயர்த்தப்பட்டது.
இது விமான டிக்கெட் கட்டணத்தில் எதிரொலித்து உள்ளது. அந்தவகையில் விமான டிக்கெட்டில் எரிபொருள் துணை கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் உயர்த்தி உள்ளது. இது டிக் கெட் விலையை மேலும் அதிகரித்து இருக்கிறது. அதன்படி உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.100 முதல் ரூ.350 வரை தொலைவை பொறுத்து அதிகரிக்கிறது. இதைப்போல சர்வதேச விமானங்களுக்கும் டிக்கெட் கட்டணம் உயர்கிறது.
சர்வதேச விமானங்களில் 500 கி.மீ. வரை ரூ.375-ம், 501 முதல் 1000 கி.மீ. வரை ரூ.600-ம் கூடுதலாக வசூலிக்கப்படும் 1001 முதல் 1,500 கி.மீ. வரையிலான தூரத்துக்கு ரூ.900-ம், 1,501 முதல் 2000 கி.மீ. வரையிலான தொலைவுக்கு ரூ.1,150-ம் அதிகரிக்கிறது. 2,000 கி.மீ.க்கு மேற்பட்ட தூரத்துக்கு 1,300-ம் கூடுலாக வசூலிக்கப்படும்.
சார்க் பிராந்தியத்துக்கு ரூ.1,000 முதல் ரூ.3 ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ரூ.6 ஆயிரமும், ஐரோப்பிய நாடுகளுக்கு ரூ.10 ஆயிரமும் டிக்கெட் கட்டணம் உயர்கிறது. மேலும் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளுக்கு ரூ.5,500 வரையும் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கிறது.
இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ள இந்த கட்டண உயர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. சமீப மாதங்களில் விமான எரிபொருள் கட்டணம் தொடர்ந்து அதிகரித்ததால், மாதாந்திர அடிப்படையில் விமான எரிபொ ருள் விலை 14 சதவீதம் அதிகரிப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
விமான நிறுவனத்தின் இயக்க செலவுகளில் விமான எரிபொருள் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருப்பதால், இந்த விலை உயர்வானது இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங் களின் செலவு கட்டமைப்புகள் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனவே இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது எனக்கூறி யுள்ள இண்டிகோ நிறுவனம், இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துவதாகவும் கூறியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, நாள்தோறும் 2,200-க்கு அதிகான விமானங்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.