தமிழக செய்திகள்

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கனமழை காரணமாக, அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

கோவை,

கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குள்பட்ட சாடிவயல் பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் அருவிக்கு உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த சூழலில், மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்காலிகமாக மூடல்

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. நீர்வரத்து குறைந்து, பாதுகாப்பு சூழல் சீரடைந்த பின்னரே சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அருவிப்பகுதி மற்றும் வன எல்லைக்குள் அத்துமீறி யாரும் நுழைய வேண்டாம் என்றும் வனக்கோட்டம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT