தமிழக செய்திகள்

ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

பனிப்பொழிவால் உற்பத்தி குறைந்ததால் ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பனிப்பொழிவால் உற்பத்தி குறைந்ததால் ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பூக்கள் விலை உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாமந்தி, ரோஜா, பட்டர் ரோஸ், மேரிகோல்டு உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு உள்ளன. இந்த ஓசூர் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த பூக்கள் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓசூர் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்தது. அதன்படி சில நாட்களுக்கு முன்பு கிலோ சாமந்தி ரூ.20 முதல் 30-க்கு விற்கப்பட்டது. விலை உயர்வால் நேற்று ஒரு கிலோ சாமபந்தி பூ ரூ.100-க்கு விற்கப்பட்டது. அதேபோல் கடந்த வாரம் பட்டர் ரோஸ் கிலோ ரூ.10 முதல் 20-க்கு விற்கப்பட்டது. நேற்று கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

மேலும் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.800 முதல் 1,000-க்கும் விற்கப்பட்டது. ஓசூர் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக உற்பத்தி குறைந்தும், மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்து விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT