திண்டுக்கல்,
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026க்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றது. இந்நிலையில் தேர்தல் தொடர்பாக, தேர்தல் கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினருக்கு, திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சித் தலைவர் சரவணன் மற்றும் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப், ஆகியோர்களின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அலுவலர்களுக்கு வாகனச் சோதனை மேற்கொள்ளும் போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.
குறிப்பாக வாகனத்தில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர்.