தமிழக செய்திகள்

சென்னையை தொடர்ந்து கோவையிலும் காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் பீதி

தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை,

சென்னையில் அடையாறு இந்திரா நகர் பூங்கா, நீலாங்கரை பகுதிகளில் காகங்கள் கொத்து, கொத்தாக இறந்து கிடந்தன. தற்போது வரை ஆங்காங்கே காகங்கள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவில் 'எச்5 என்1' வைரஸ் தொற்று, அதாவது பறவை காய்ச்சல் ஏற்பட்டு காகங்கள் இறந்திருப்பது உறுதி செய்யப்பட் டது.

இந்தநிலையில் கோவை-பாலக்காடு சாலை குனியமுத்தூர் பகுதியில் சாலையோர மரத்தின் அடியில் காகங்கள் அடுத்தடுத்து இறந்து கிடந்தன. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே சென்னையில் அடுத்தடுத்து காகங்கள் இறந்து வந்த நிலையில் தற்போது கோவையிலும் காகங்கள் இறந்து கிடந்ததால் பறவை காய்ச்சல் பாதிப் பாக இருக்குமோ? என்று அவர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, சென்னையில் இறந்து கிடந்த காகங்களை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் உறுதியானது. அது போன்று குனியமுத்தூர் பகுதியிலும் மரத்தடியில் அடுத்தடுத்து காகங்கள் இறந்து கிடந்தன. இதற்கு பறவை காய்ச்சல் காரணமாக இருக்குமோ? என்ற பீதியை ஏற்ப டுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், கால்நடைத்துறை அதிகாரிகள் இறந்த காகங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பறவை காய்ச் சலுக்குள்ளான கோழிகள் மற்றும் பிற பறவை இனங்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பாதிப்பு பரவும். மேலும் பாதிக்கப்பட்ட பறவையி டம் இருந்தோ, மனிதரிடம் இருந்தோ, மற்றவர்களுக்கு, 'வெஸ்ட் நைல் வைரஸை' கொசுக்கள் கடத்தும் என்பதால், அவர்களும் எளிதில் பாதிக் கப்படும் வாய்ப்பு அதிகம்.

தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோழி இறைச் சிகள், முட்டைகளை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும் என்றனர்.