தமிழக செய்திகள்

புழல், தேனியைத் தொடர்ந்து கோவை சிறையிலும் கைதி தப்பியோட்டம்... உதயநிதி கடும் விமர்சனம்

புழல், தேனி சிறைகளைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தடுத்து சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புழல், தேனி சிறைகளைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார். இதனைச் சுட்டிக்காட்டி தமிழக அரசின் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் இங்கி பிங்கி பாங்கி (inky pinky ponky) போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு டம்மி (Dummy) முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.

தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர். இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும். 'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT