சென்னை,
தேர்தல் வாக்குறுதி அளித்ததை மறந்துவிட்டதால் த.வெ.க. அரசு அமைதி காக்கிறதா? என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஆகஸ்ட் 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட MMDR சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்டது.
தமிழ்நாட்டைப் பொருளாதார இறையாண்மை கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்ததை மறந்துவிட்டதால் த.வெ.க. அரசு அமைதி காக்கிறதா?
இச்சட்டத் திருத்தம் மாநிலத்தின் நிதிச்சுமையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மாநில அரசின் அதிகார வரம்புக்குள் உள்ள நிலத்தின் மீது ஒன்றிய அரசு அதிகாரம் செலுத்த முயல்வதும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது.
இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் இன்னும் எத்தனை நாட்களுக்கு அமைதி காக்கப் போகிறார்?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.