திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் மொத்தம் ரூ.94 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் கடத்தல் தங்கத்தை சுஙகத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த பயணிகளிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் வழியாக வியட்நாம் செல்ல வந்த 2 பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.13 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல கோலாலம்பூரில் இருந்து வந்த பயணியிடம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 10 சவரன் தங்கம் சிக்கியது. கடந்த 5-ந்தேதி 2 பயணிகளிடம் ரூ.70 லட்சம் மதிப்பிலான டாலர், பவுண்ட், யூரோவும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் 5 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.94 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் மற்றும் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.