தமிழக செய்திகள்

நீலகிரியில் 10 நாட்களாக பரவி வரும் காட்டுத்தீ - 5,000 ஏக்கர் வனப்பகுதி சேதம்

கோடை வெயிலின் தாக்கம் மற்றும் வரட்சி காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பார்சன்ஸ் வேலி மற்றும் பைகாரா வனப்பகுதிகளில் கடந்த 10 நாட்களாக காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத் தீயால் இதுவரை சுமார் 5,000 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் மற்றும் வரட்சி காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காற்றின் வேகம் காரணமாக தீயை முழுமையாக அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.