தமிழக செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. எம்,எல்.ஏ.வின் மகன், அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரின் மகளை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவரது மகன் பரத்குமார் (வயது 30). இவர் அதே ஊரை சேர்ந்த தி.மு.க. பிரமுகரின் மகள் மகாலட்சுமி என்பவரை காதலித்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கெண்டார்.

விஷம் குடித்து தற்கொலை

இந்த தம்பதியிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூட்டேரிப்பட்டில் மயிலம் சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்த பரத்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT