நெல்லை
நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உமா மகேஸ்வரி 1996-ல் நான் சென்னை மேயராக இருந்தபோது அவர் நெல்லை மாநகராட்சியில் முதல் பெண் மேயராக பதவியேற்று மக்களுக்கு பல சிறப்பான பணிகளை செய்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு சேவை செய்தவர்.
நினைத்து பார்க்க முடியாத சூழலில் நேற்று மூவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களது குடும்பத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆட்சியில் தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நாள்தோறும் நடந்து வருகிறது. இதற்கு முடிவே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது. படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.