தமிழக செய்திகள்

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

சென்னை,

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கின் 94-வது பிறந்தநாளான இன்று அவரது திருவுருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். வி.பி.சிங் சிலை நிறுவப்பட்ட பிறகு அரசு சார்பில் முதல் பிறந்தநாளான இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT