தமிழக செய்திகள்

முன்னாள் சபாநாயகர் ப.தனபால் மகனுக்கு த.வெ.க. அமைச்சரவையில் இடம்

2001-ம் ஆண்டு அதிமுக அமைச்சரவையில் ப.தனபால் இடம்பெற்றிருந்தார்.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் ப.தனபால். 2012-2016-ம் ஆண்டு காலத்திலும், 2016-2021-ம் ஆண்டு காலத்திலும் சபாநாயகராக இருந்தார். 1977, 1980, 1984, 2001 ஆகிய ஆண்டுகளில் சங்ககிரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. அமைச்சரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.

தொடர்ந்து, 2011-ம் ஆண்டு தேர்தலில் ராசிபுரத்தில் இருந்தும் 2016-ம் ஆண்டு தேர்தலில் அவினாசி தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ப.தனபால், சபாநாயகராக இருந்தார். ஆனால், தற்போது நடைபெற்ற தேர்தலில் அவருக்கு அ.தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.

அவருடைய மகன் டி.லோகேஷ் தமிழ்செல்வன் த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு ராசிபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். தற்போது டி.லோகேஷ் தமிழ்செல்வனுக்கும் த.வெ.க. அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.