தமிழக செய்திகள்

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் மறைவு: முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கும் முதல்-அமைச்சர் விஜய், இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் மறைவு

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் (ஓய்வு) அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

சுகவனேஸ்வர் அவர்கள் 1967-ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டு, திருநெல்வேலியில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கி, நீலகிரி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், வருவாய் நிருவாக முதன்மை ஆணையர், சிட்கோ தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து திறம்படப் பணியாற்றியவர் ஆவார்.

முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT