தமிழக செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் காலமானார்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் வணிகம் மற்றும் தொழில்துறைக்கான இணை அமைச்சராக பதவி வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார்.

சிவகங்கை

முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் உடல்நல குறைவால் இன்று காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான சுதர்சன நாச்சியப்பன் உடல்நல குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 78.

மத்திய இணை மந்திரி

சிவகங்கையில் எரியூர் பகுதியில் வசித்து வந்த அவர் வீட்டில் இருந்தபோது, திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில், வீட்டில் அவருடைய உயிர் பிரிந்தது. அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவர், 2013-ம் ஆண்டில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் வணிகம் மற்றும் தொழில்துறைக்கான மத்திய இணை மந்திரியாக பதவி வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார்.

SCROLL FOR NEXT