திருப்பூர்,
திருப்பூர் முதலிபாளையம் அருகே நல்லூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், வங்காளதேசத்தை சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் (வயது 39), நைமூர் ரஹ்மான் பாஹிம், நசீர் ஹொசைன் (29), மில் கிங்ஸ்டன் காக்ரா (36) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த ஆதார் கார்டுகளை சோதனை செய்தபோது, அது போலியானது என தெரியவந்தது. இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, திருப்பூர் சிட்கோ மற்றும் முதலிபாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.