தமிழக செய்திகள்

நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி,

நெல்லை மாநகரம், பேட்டை பகுதியில் நேற்று ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கொலை முயற்சி வழக்குகள்

திருநெல்வேலி மாநகரம், பேட்டை சத்யா நகர், முத்துராமலிங்க நகரைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் சிவா (வயது 26), தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த சுந்தரசேகர் மகன் காளிதாஸ்(26) ஆகிய 2 பேர் நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குத்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.

2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

இதனையடுத்து பேட்டை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று மேற்சொன்ன 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

கஞ்சா போதை பொருள் விற்பனை

திருநெல்வேலி மாநகரம், பேட்டையைச் சேர்ந்த சபூர்அலி மகன் சித்தர்பாதுஷா(23), துரைராஜ் மகன் மகாராஜன்(24) ஆகிய 2 பேர், நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த மருந்து சரக்கு குற்றவாளிகள் ஆவர்.

2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

இதனையடுத்து பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று மேற்சொன்ன 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளைங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.