சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் 59 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தனித்தனியாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இதன்படி அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்ற நிலையில், இந்தக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மதவாத சக்திகளுக்கு இடமளிக்க கூடாது; நிலையான ஆட்சி அமைக்க தேவையான முடிவெடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்; சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி; காங்கிரஸ் தனது பழைய குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை (கண்டனம் தெரிவித்து தீர்மானம்) என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.