image Credit: AI 
தமிழக செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு; கலெக்டர் அறிவிப்பு

இந்த தகவலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் (முதனிலை) தேர்வு தொகுதி-1 பதவிக்கான பொது தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 வரை நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் அதிக பயிற்சி தேர்வுகளும், மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும் பள்ளிப்பாடப் புத்தகங்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, இலவச இணையதள வசதிகள் உள்ளது. எனவே இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபர்கள் https://forms.gle/HbkxgCRgVqHh1Vyk9 என்ற இணையதளம் மூலம் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.