சென்னை,
தீபாவளி பண்டிகை முன்னிட்டு – விலையில்லா வேட்டி, சேலைகள் நியாய விலைக் கடைகளில் இன்று (03.11.2026) முதல் வழங்கப்படும். முதியோர் ஓய்வூதியதாரர்கள் 7-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தீபாவளி 2026 பண்டிகைக்கான வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு இன்று (03.11.2026) முதல் வழங்கப்படுகிறது.
முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள், 07.11.2026-க்குள் தங்களது நியாய விலைக் கடைகளில் விலையில்லா வேட்டி, சேலைகளைப் பெற்றுக்கொள்ளலாம். பயனாளிகள் தங்களது குடும்ப அட்டையுடன் நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டம் எவ்வித தாமதமுமின்றி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய, கூட்டுறவுத் துறை அலுவலர்கள் நியாய விலைக் கடைகளுக்கான நகர்வு மற்றும் விநியோகப் பணிகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.