தமிழக செய்திகள்

குரும்பலூரில் இலவச கண் சிகிச்சை முகாம்; நாளை நடக்கிறது

குரும்பலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் குரும்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு கண் புரை நோய் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக சிகிச்சை பெறலாம் என்று குரும்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சூர்யா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT