தமிழக செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

திருப்புகலூர் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வட்டார ஆத்மாகுழு தலைவர் செல்வ செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் ரத்த சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல், ரத்த கொதிப்புக்கான சிகிச்சைகள், தைராய்டு, ஆஸ்துமா, சுவாசக்கோளாறு, தலைவலி, உடல் வலி, காய்ச்சலுக்கான சிகிச்சைகள், உடல் பருமன் அளவீடு, ஈ.சி.ஜி. மற்றும் பொது மருத்துவம் செய்யப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஒன்றிய பொறியாளர் செந்தில், ஒன்றியக்குழு உறுப்பினர் பேபிசரளா பக்கிரிசாமி, ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் திருப்புகலூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

SCROLL FOR NEXT