தமிழக செய்திகள்

சென்னையில் இலவச எலும்பு மருத்துவ சிகிச்சை முகாம்; 130 பேர் பயனடைந்தனர்...!

பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

சென்னை,

சென்னையில் உள்ள எம்.என். ஆர்த்தோபெடிக் ஆஸ்பத்திரி மற்றும் மித்ரா (மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையம்) இணைந்து நடத்திய இலவச எலும்பு மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று முன் தினம் நடைபெற்றது.

டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் டாக்டர்கள் ஆர்.எம்.அழகப்பன், எம்.டி.குமார், கார்த்தி சுந்தர் மற்றும் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்குப் பரிசோதனை மேற்கொண்டனர்.

முகாமில் சுமார் 130-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அவர்களுக்குத் தேவை யான மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதோடு எக்ஸ்-ரே, எலும்பு அடர்த்தி பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.