சென்னை,
தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து, மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். நகரங்களிலும், கிராமங்களிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். முதியவர்கள், பெண்கள், முதல் முறை வாக்களிப்பவர்கள் உள்ளிட்ட பலரும் உற்சாகமாக வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து தேர்தல் சூழலை உற்சாகமாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், காலை முதல் திரைப்பிரபலங்கள் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், யார் எந்தெந்த இடங்களில் வாக்களித்தனர் என்பதை காணலாம்.
• ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் -சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி
• சுதா கொங்கரா - சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி
• விக்ரம் - சென்னை பெசன்ட் நகர்
• சரத்குமார் - சென்னை கொட்டிவாக்கம்
• சிவகார்த்திகேயன் - வளசரவாக்கம்
• ஹரிஷ் கல்யாண் - வளசரவாக்கம்
• இயக்குனர் அட்லீ - ஆழ்வார்பேட்டை
• கென் கருணாஸ், கருணாஸ், கிரேஸ் கருணாஸ் - வடபழனி
• விஜய் - நீலாங்கரை
• கமல்ஹாசன்- ஆழ்வார்பேட்டை
• ஆர்.ஜே.பாலாஜி - கோட்டூர்புரம்
• அனிருத் - ஆழ்வார்பேட்டை
• குஷ்பு - சென்னை மந்தவெளிப்பாக்கம்
• ஜெய் - அடையார்
• ஆரவ் - அண்ணாநகர்
• கவுதம் ராம் கார்த்திக் - சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி
• அஜித் - திருவான்மியூர்