தமிழக செய்திகள்

விபத்தில் கால்கள் செயல் இழந்ததால் விரக்தி ; அணுமின் நிலைய ஊழியர் விபரீத முடிவு

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அன்புமணி விபத்தில் சிக்கினார். விபத்தில் 2 கால்கள் செயலிழந்ததாக தெரிகிறது.

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் அன்புமணி (வயது 39). இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மக னும் உள்ளார். திண்டிவனத்தை சேர்ந்த இவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை கிடைத்தவுடன் கடந்த 15 ஆண்டுகளாக கல்பாக்கம் நகரிய குடி யிருப்பில் வசித்து வந்தார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அன்புமணி விபத்தில் சிக்கினார். விபத்தில் 2 கால்கள் செயலிழந்ததாக தெரிகிறது. வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் தனது மகனை அன்புமணியின் மனைவி பள்ளிக்கு அழைத்து சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது. இது குறித்து கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்த னர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த அன்புமணியை மீட்டு சிகிச்சைக்காக அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் உள்ள அணுவாற்றல் துறையின் ஆஸ்பத்திரிக்குக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அன்புமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கல்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT