தமிழக செய்திகள்

கூட்டணி குறித்து முடிவு செய்ய ராமதாசுக்கு அதிகாரம்: பாமக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விவரம்

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செயல்தலைவர் ஶ்ரீகாந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-