தமிழக செய்திகள்

தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையான கடன் தள்ளுபடி - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தமிழகம் முழுதும் கிளர்ந்து வரும் விவசாயிகளின் வலுவான கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

சென்னை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி செய்தி ஊடகங்களுக்கு கொடுத்த செய்தியில் தெரிவித்தாவது :-

தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மீண்டும் த.வெக. அரசு கடன் தள்ளுபடி அறிவிப்பு.. மீண்டும் விவசாயிகள் ஏமாற்றம். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்...

ஆர்ப்பாட்டங்களை நடத்தியது

த.வெ.க..அரசு தற்பொழுது இரண்டாவது தடவையாக விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு என்பது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக தேர்தல் வாக்குறுதியாக,, சிறு,குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, இதர விவசாயிகளுக்கு 50 சதம் தள்ளுபடி என்று அறிவித்தது.

24.5.26 அன்று மாநில அரசு அறிவித்திருந்த கடன் தள்ளுபடி இதன், தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக இருந்த நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் இணைந்து கடந்த 26.5.26 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

அரசு ஆணை வந்துள்ளது

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் கொந்தளித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களும் வரும் நிகழ் ஜூன் 22 அன்று சென்னை கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவியநிலையில் போராட்டம் நடத்திட அறிவிக்கப்பட்டு ஏற்பாடு நடந்து வருகிறது.

இந்த சூழலில், .. மீண்டும் கடன் அறிவிப்பிற்கான புதிய ஆணையை இந்த அரசு இன்று வெளியிட்டிருக்கிறது. அதாவது 75,000 ரூபாய்க்கு கீழ் நிலுவையில் உள்ள கடன் முழு தள்ளுபடி..... 75,000 ரூ.பாய்க்கு மேல் கடன் இருப்பவர்களுக்கு 35 ஆயிரம் மட்டும் தள்ளுபடி என அரசு ஆணை வந்துள்ளது.

கடன்தள்ளுபடி

கடந்த அறிவிப்பை விட இது கொஞ்சம் கூடுதல் பயனை கொடுக்கும் என்பது உண்மை. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் சிறுகுறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி என்கிற பொழுது.... 5 ஏக்கர் வரை கடன் பெற தகுதி உள்ள சிறு விவசாயி, 1.75.லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று இருப்பார்கள். இவர்கள் சிறு விவசாயிகளாக இருந்தாலும்... 75 ஆயிரம் மட்டுமே இவர்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். எஞ்சிய கடன் தொகையை செலுத்த வேண்டும். ஆனால் தேர்தல் வாக்குறுதிபடி 5 ஏக்கர் உள்ளவர் சிறு விவசாயி என்கிற முறையில் முழு கடன்தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

அதேபோல இதர விவசாயிகளான ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் என்ற நிலையில் ஒருவர் 5.1 ஏக்கருக்கு கடன் பெற்று இருந்தால் அவர் 1.75 லட்சம் ரூபாய் கடன் பெற்று இருப்பார். ஆனால் இவருக்கு 35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி. எஞ்சிய கடன் தொகையை செலுத்த வேண்டும். தேர்தல் வாக்குப்படி இவர்களுக்கு 50 சதமான 87,500 ரூபாய் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள்

இதுவரை கூட்டுறவு கடன் தள்ளுபடி என்பது நிலம் அளவீடை கொண்டு அறிவிக்கப்பட்டது. தற்பொழுது கடன் தொகையை அளவாக கொண்டு அறிவிக்கப்பட்டது தான் பிரசினை. முதல்வரையும், விவசாயிகளையும் ஏமாற்றத்தான் வங்கி உயர் அலுவலர்கள் உரிய துறை அமைச்சர்களோடு சேர்ந்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். ஆட்சியில் அமருவதற்காக ஆட்சியாளர்கள் கூறிய வாக்குறுதியைத்தான் விவசாயிகள் கோறுகிறார்கள். எனவே இந்த ஆணையை திரும்ப பெற வேண்டும்.

கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

வாக்குப்படியான கடன் தள்ளுபடி அறிவிப்பை அறிவித்து, நடைமுறைப்படுத்திட வேண்டும். எனவே இதை வலியுறுத்தி முன்னர் இரண்டு தமிழ்நாடு விவசாய சங்கங்களும் அறிவித்துள்ளபடி நிகழ் ஜூன்22.. ஆம் தேதி அன்று சென்னை கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழகம் முழுதும் கிளர்ந்து வரும் விவசாயிகளின் வலுவான கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.