கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 471 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 471 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 41 ஆயிரத்து 797 ஆக உயர்வடைந்து உள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 498 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரத்து 025 ஆக உயர்வடைந்து உள்ளது. சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகளால் உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார். இதன்படி, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 383 ஆக உள்ளது. தற்போது 4,389 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 151 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 232316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,63,88,243 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 53,530 மாதிரிகள் கொரோனா பரிசேதனை செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.