சென்னை,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், பயணிகளின் கூடுதல் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், ரெயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு தாம்பரம் - தென்காசி மற்றும் செங்கோட்டை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தாம்பரம் - தென்காசி சிறப்பு ரெயில் (ரெயில் எண் 06123) அக்டோபர் 1-ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
இந்த ரெயில் மறுநாள் அக்டோபர் 2-ஆம் தேதி மதியம் 12.15 மணிக்கு தென்காசி சென்றடையும்.
செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு ரெயில் (ரெயில் எண் 06124) அக்டோபர் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும்.
இந்த ரெயில் மறுநாள் அக்டோபர் 5-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
1 ஏ.சி. 2-அடுக்கு பெட்டி
2 ஏ.சி. 3-அடுக்கு பெட்டிகள்
12 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class)
4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள்
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.