தமிழக செய்திகள்

ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம்: முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

மகாத்மா காந்தியின் ஆவணப்படத்தை முதல்-அமைச்சர் விஜய் கண்டு ரசித்தார்.

மதுரை,

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க. அறிவித்தது. இந்த திட்டத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பிரசவ வார்டுக்கு சென்று, அந்த ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை முதல்-அமைச்சர் விஜய் அணிவித்தார். மேலும் அங்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் அங்கிருந்து மகாத்மா காந்தி அருங்காட்சியகத்துக்கு முதல்- அமைச்சர் விஜய் சென்றார். முதலில் அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முதல்- அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். பின்னர் அருங்காட்சியகத்திற்குள் உள்ளே சென்று பார்வையிட்டார். அப்போது மகாத்மா காந்தியின் பொருட்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து மகாத்மா காந்தியின் ஆவணப்படத்தை முதல்-அமைச்சர் கண்டு ரசித்தார். மேலும் அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள வருகை பதிவேட்டில் தன் பெயரை முதல்-அமைச்சர் விஜய் பதிவு செய்தார். தொடர்ந்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டபோது காந்தியின் உபதேசங்களில் ஒன்றான, 'நாம் உலகில் பார்க்க விரும்பும் மாற்றம்.. முதலில் நம்மிடம் நிகழ வேண்டும்' என்கிற வாசகத்தை நிர்வாகி ஒருவர் காண்பித்தார்.

SCROLL FOR NEXT