தமிழக செய்திகள்

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது - தமிழக அரசு அறிவிப்பு

விருது பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையாக தலா ரூ.40,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக (i) வா.வெ.சாய்பிரணீத், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், திருவள்ளூர் மாவட்டம் (ii) ஜெ.ராமன், காவல் ஆய்வாளர், தனிப்பிரிவு, திருச்சி மாவட்டம், (iii) க.சண்முகம், காவல் உதவி ஆய்வாளர், விக்கிரவாண்டி காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம், (iv) திரு. எ. கருணாகரன், தலைமைக் காவலர்-1674, திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையம், கடலூர் மாவட்டம் மற்றும் (v) பெ.செல்வம், தலைமைக் காவலர்-381, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, கள்ளக்குறிச்சி மாவட்டம் (அயற்பணி மத்திய நுண்ணறிவுப் பிரிவு, விழுப்புரம் மண்டலம்) ஆகியோருக்கு 2026-ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விருது, முதல்-அமைச்சரால் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள், குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT