தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்

தூத்துக்குடி மாநகரில் கடைகளில் விநாயகர் சிலைகள் ரூ.20 முதல் ரூ.3 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

தூத்துக்குடி,

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடியில் பூஜைக்கான விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக விநாயகர் சிலைகள் உள்ளிட்ட பூஜைக்கான பல்வேறு பொருட்களையும் வாங்குவதற்காக மக்கள் முக்கிய கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி, தூத்துக்குடி மாநகரில் சிவன் கோவில் அருகே உள்ள கடைகளில் பல்வேறு அளவுகளிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்குக் குவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்துப் பூஜை செய்வதற்காக ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.

விநாயகர் சிலைகள் ரூ.20 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை

பொதுமக்களின் வசதிக்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் முதல் பெரிய அளவிலான வண்ணச் சிலைகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடைகளில் விநாயகர் சிலைகள் ரூ.20 முதல் ரூ.3 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. பண்டிகை நாளையொட்டி தூத்துக்குடி மாநகர கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

SCROLL FOR NEXT