திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு பகுதியை சேர்ந்த நம்பி என்பவரின் மகன் சுப்பையா(எ) சுரேஷ் (வயது 39) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்சொன்ன நபர் மீது களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதன் பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், மேற்சொன்ன நபர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.