தமிழக செய்திகள்

மேலப்பாளையத்தில் கஞ்சா பறிமுதல்: போலீசார் வழக்குப்பதிவு

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் மேலப்பாளையம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல்பாசித் (வயது 25), சிறார் ஒருவர் ஆகிய 2 பேரையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவர்கள் மறைத்து வைத்திருந்த 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT