தமிழக செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது

நத்தத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நத்தம் பஸ்நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் பஸ்நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நத்தத்தை சேர்ந்த முகமது ரபீக் (வயது 19) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து முகமது ரபீக்கை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT