சென்னை,
தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய மின்னணு சரிபார்ப்பு பதிவுக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
இதுவரை தமிழகத்தில் சுமார் 85 சதவீத கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் மின்னணு சரிபார்ப்பு பதிவை முடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இன்னும் 15 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பதிவை மேற்கொள்ளாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மின்னணு சரிபார்ப்பு பதிவு செய்யாத வாடிக்கையாளர்கள் நாளை முதல் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 85 சதவீதம் பேர் இதுவரை மின்னணு சரிபார்ப்பு பதிவை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீதம் பேர் இன்னும் பதிவு செய்யவில்லை. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 50 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், காலக்கெடு முடிவதற்கு முன்பாக தங்களது மின்னணு சரிபார்ப்பு பதிவை முடித்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்களின் செயலிகள் மூலமாகவும் மின்னணு சரிபார்ப்பு பதிவை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் எரிவாயு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியைத் திறந்து, அதில் வழங்கப்பட்டுள்ள மின்னணு சரிபார்ப்பு பதிவு வசதியைப் பயன்படுத்தி தங்களது விவரங்களைச் சரிபார்த்து பதிவு செய்யலாம்.