தமிழக செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு: ஜான்பாண்டியனிடம் விசாரணை

ஜெம் வீரமணி வழக்கில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் மீதும் புகார்கள் கூறப்பட்டது.

சென்னை,

சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, பிரபல தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 12 சிறுமிகள் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். அவற்றில் 8 புகார்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமார் மீதும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் மீதும் புகார்கள் கூறப்பட்டது. தங்கள் மீதான புகார்களை ஏற்கனவே ரஞ்சன்குமாரும், ஜான்பாண்டியனும் மறுத்துவிட்டனர். ரஞ்சன் குமார், 'ஜெம் வீரமணி மீது நான்தான் போலீசில் புகார்கொடுத்தேன்' என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் சிறப்பு புலனாய்வு போலீசிலும் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் ஜான்பாண்டியனையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அந்த சம்மனை ஏற்று, ஜான்பாண்டியன் சிறப்பு புலனாய்வு படைபோலீஸ் முன்னிலையில் ஆஜரானதாகவும், அவரிடம் சுமார் 2 மணிநேரம் விசாரணை நடந்ததாகவும் அவரது கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT