திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பழைய ஆயக்குடி பகுதியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் முளைத்த 3 கிலோ எடை கொண்ட ராட்சத காளானை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது தோட்டத்தில் கொய்யா சாகுபடி செய்து வருகிறார். நேற்று கொய்யாப்பழம் பறிப்பதற்காக தோட்டத்துக்கு சென்றார். அப்போது தோட்ட பகுதியில் பெரிய அளவில் காளான் ஒன்று முளைத்திருப்பதை கண்டார்.
அந்த காளானை பறித்து எடை போட்டு பார்த்த போது 3 கிலோ இருந்தது. வழக்கமாக காளான் கால் கிலோ அளவில் இருக்கும். ஆனால் 3 கிலோ எடை கொண்ட அந்த ராட்சத காளானை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து சென்றனர்.