தமிழக செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஓசூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்

தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்தம்சாலை ஓம் சாந்தி நகரை சேர்ந்தவர் பிரித்தி தேவி (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த ரதோர் ஷாம்குமார் என்பவருடன் `லிவிங் டூகேதர்' என்ற முறையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஓராண்டுக்குள் அவர்கள் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட தொடங்கியது.

அதன்படி கடந்த சில நாட்களாக இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த பிரித்தி தேவி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரித்தி தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு