மதுரை,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் உதயா (வயது 23). பெயிண்டர். இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சிறுமியை வழிமறித்து காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த சிறுமி, இதுகுறித்து தனது தாயாரிடம் கூறி அழுது உள்ளார். இதுகுறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், சப்இன்ஸ்பெக்டர் மெகராஜ் மற்றும் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உதயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.