தமிழக செய்திகள்

கிரில் கம்பிக்குள் சிக்கிய சிறுமியின் தலை - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தபோது கிரில் கம்பியில் சிறுமியின் தலை சிக்கிக்கொண்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சந்தனபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் தியாழினி (4 வயது). சம்பவத்தன்று சிறுமி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு உள்ள கிரில் கம்பியில் அவரது தலை சிக்கிக்கொண்டது. இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறி துடித்தார்.

இதையடுத்து, சிறுமியை மீட்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) நாகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இரும்பு கம்பியை அறுத்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.