தமிழக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நவநீதம் 'நவி' பிள்ளைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

இதனால் உலகத் தமிழர்கள் பெருமிதம் அடைகிறார்கள். மேலும் இந்தியர்களுக்கு ஊக்கமும், நம்பிக்கையும் அளித்துள்ளார்.

சென்னை,

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நவநீதம் 'நவி' பிள்ளைக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு

2026-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்கச் சட்ட நிபுணர் நவநீதம் 'நவி' பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்ட அவர் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவது பாராட்டுக்குரியது.

வாழ்த்து

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் உலக அரங்கில் பேரும் புகழும் பெற்றுத்தந்திருக்கிறார். இதனால் உலகத் தமிழர்கள் பெருமிதம் அடைகிறார்கள். மேலும் இந்தியர்களுக்கு ஊக்கமும், நம்பிக்கையும் அளித்துள்ளார். தனது அறிவுத்திறனால், கடின உழைப்பால், அர்ப்பணிப்பான உணர்வால் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது போற்றுதலுக்குரியது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் ‘நவி’ பிள்ளை அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT